Language English Tamil

வரலாறு

பொதுப்பணித்துறை 163 ஆண்டுகள் வரலாறு
 • “கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குடி” என தமிழீனத்தைக் குறிப்பிடுவது போல தமிழகத்தில் மக்கள் மற்றும் அரசு துறைகளின் நலன் காக்க முதன் முதலில் தோற்றுவிக்கப்பட்ட அரசுப் பொறியியற் துறை பொதுப்பணித்துறையாகம்.

 • 1858 ஆம் ஆண்டு மதராஸ் பொதுப்பணித்துறை என நிறுவப்பட்ட இந்தத்துறை, பொது மக்களின் முன்னெற்றத்திற்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் சீரிய பணிகளை ஏற்று நிறைவேற்ற இடைவிடாது செயல்பட்டு, பல கிளைகளை தோற்றுவித்து, அவைகளயெல்லாம் வளர்ந்து மேம்பட துணைநின்று, இன்றைக்கு 163 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது என்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும். இத்தருணம் இத்துறையின் தோற்றம், வளர்ச்சியை பற்றி சில சரித்திர சான்றுகள் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கவே இந்த வரலாறு.

மராமத்து இலாகா
 • சென்னை மாகாணத்தைப் பொறுத்தவரை இங்கு ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த பல பாசனக் கட்டுமானங்களையும் பாசன ஏரிகளையும் மேம்படுத்தி, பராமரித்து, நிர்வகிப்பது ஒரு முக்கியப்பணி எனவும், அப்படிச் செய்வதால்தான் மக்கள் உணவு உற்பத்தியைப் பெருக்கி, அரசுக்கு நில வரி செலுத்தி, அவர்களும் நிம்மதியாக வாழ்வார்கள், நாட்டில் அமைதி நிலவும் என்பதை புரிந்து கொண்டு, அதற்காக “மராமத்து இலாகாவை” 1819-ல் முதன் முதலில் தோற்றுவித்தனர்.

 • ராணுவ இலாகாவைத் தவிர்த்து முதன் முதலில் நிறுவப்பட்ட சிவில் இலாகா மராமத்து இலாகா தான். அதுவும் பாசனப் பணிகளை செயல்படுத்த தோன்றியது. இந்த மராமத்து இலாகா வருவாய் வாரியத்திற்குட்பட்டு, மாவட்ட ஆட்சியர்களுக்குக் கீழ் சில ஆங்கில பொறியாளர்களை நியமித்து நிறுவப்பட்டது. 1838 ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தில் 8 மராமத்து கோட்டங்கள் நிறுவப்பட்டு, பாசனப் பணிகளுடன் அரசைச் சேர்ந்த கட்டடங்களை பராமரித்தல், புது கட்டடங்கள் தோற்றுவித்தல் போன்ற பணிகளெல்லாம் ராணுவ இலாகாவிலிருந்து மராமத்து இலாகாவிற்கு மாற்றப்பட்டு ஒப்படைக்கப்பட்டன. அன்று மராமத்து இலாகாவில் 24 நிரந்தர பொறியாளர்கள், 11 தற்காலிக பொறியாளர்கள், 23 ஆங்கில ஓவர்சீயர்கள், 25 இந்தியசர்வேயர்கள், 35 இந்திய மேஸ்திரிகள் ஆகியோர் பணியில் இருந்தனர் என ஒரு குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே 1858-ல் பொதுப்பணித்துறை இவ்விலாகாவே உருவெடுத்தது.

பொதுப்பணித்துறை தோற்றம்
 • கிழக்கு இந்திய வர்த்தக கம்பெனியின் இங்கிலாந்தில் இயங்கி வந்த இயக்குனர் குழுமம், 1857-ஆம் ஆண்டு மராமத்து இலாகாவின் பணிகளை ஆய்வு செய்து அந்த இலாகா விரிவாக்கப்பட்டு மேலும் திறம்பட செயல்பட அறிவுரைகள் வழங்குமாறு ஒரு குழுமத்தை உருவாக்கி கேட்டுக் கொண்டது.

 • 1857-ஆம் ஆண்டு கிழக்கு இந்திய வர்த்தகக் கம்பெனியே அன்றிருந்த பிரபல ராணி எலிசபத் அவர்கள் பிறப்பித்த பிரகடனத்தின்படி இங்கிலாந்து அரசின் ஆளுகைக்குள் கொண்டுவரப்பட்டது. ஆயினும் அந்த குழுமம் வகுத்துத் தந்த பரிந்துரைகளை ஏற்று, இங்கிலாந்து அரசே 1858-ல் பொதுப்பணித்துறை என்ற இந்த இலாகாவை ஏற்படுத்தலாம் எனவும், மற்ற பரிந்துரைகளையும் ஆமோதித்துச் செயல்படுத்தலாம் எனவும் தெரிவித்தது.

 • அன்று இலாகாவில் சென்னை மாகாண அளவில் பணி ஏற்றவர்கள் : 1 தலைமைப் பொறியாளர், 3 மேற்பார்வைப் பொறியாளர்கள், 20 செயற் பொறியாளர்கள், 78 உதவிச் செயற் பொறியாளர்கள், 204 உதவிச் பொறியாளர்கள், ஓவர்சீயர்கள் மற்றும் 714 களப் பொறியாளர்கள் ஆவர்.

 • 1867- ஆம் ஆண்டு, நீர்ப்பாசனத்திற்கென்றே ஒரு தனி தலைமைப் பொறியாளர் நியமிக்கப்பட்டார். ஆங்கில அரசு பொதுப்பணிகளில் நீர்ப்பாசனத்திற்குக்கொடுத்து வந்த தனி கவனம் செலுத்தியதை இதிலிருந்தே உணரலாம்.

இந்தியப் பொறியாளர்களின் இணையில்லா ஆற்றல்
 • அன்றிலிருந்து பொதுப்பணித்துறையில் அதன் அமைப்பிலும் நிர்வாகத்திலும் பல மாறுதல்கள் அவ்வப்போது தேவைக்கேற்ப நிகழ்ந்ததெனினும், இந்தத் துறை அரசின் முக்கியத்துறைகளில் ஒன்றாக மிகச் சிறப்பாக செயல்பட்டுவருகிறது. நாடு சுதந்திர மடைவதற்கு சில வருடங்களுக்கு முன் வரை (1942) தலைமைப் பொறியாளர்களாக ஆங்கிலேயர்களே நியமிக்கப்பட்டார்கள்.

 • அவர்களுக்குக் கீழ், மேற்பார்வை பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள், அவர்களுக்கும் கீழ் மட்டத்திலும் ஆங்கிலேயர்களே பல இடங்களில் செயல்பட்டார்கள். நாளடைவில் இந்தியப் பொறியாளர்கள் பணியேற்று, இத்துறையை மேலும் வளர்த்து, பல ஆக்கபூர்வமானத் திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள்.

 • ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் பொதுப்பணித்துறையில் மேற்கொள்ளப்பட்டு திறம்பட முடிக்கப்பட்டு பாசன வளர்ச்சிக்கு பேருஉதவியாக இருந்துவரும் திட்டங்கள் பல எனினும், அவற்றில் சிலவற்றை பொது மக்களின் தகவலுக்காக குறிப்பிடுவது பொருந்தும்.

 • இத்துறை கட்டடப்பிரிவிலும், அழகான நேர்த்தியான பல கலைப்பண்பாடுகளை உள்ளடக்கி தோற்றுவித்த அரசு கட்டடங்கள் நாம் இன்றைக்கும் பார்த்து மகிழ்வதன்றி போற்றிப் புகழுமாறு இருந்து வருகின்றன.

 • புனித ஜார்ஜ் கோட்டையில் இன்றுவரை தலைமைச் செயலகம் இயங்கி வரும் கட்டடங்கள், கூவம் நதியின் மேல் நேப்பியர் பாலம், மெரீனா கடற்கரைச் சாலையில் வரிசையாக அமைந்திருக்கும் மதராஸ் பல்கலைக்கழகத்தின் கட்டடங்கள், குறிப்பாக 'செனட் ஹவுஸ்' என்ற பல வர்ணக்கண்ணாடிகள் பளபளக்கும் கட்டடம், இன்று பொதுப்பணித்துறை செயல்படும் கட்டடங்கள், அதை அடுத்து சென்னை மாகாணக் கல்லூரி, அதை அடுத்து ராணிமேரி அம்மை கல்லூரி, பின் தற்போது விவேகானந்தர் இல்லம் என அழைக்கப்படும் ஐஸ் ஹவுஸ், 1772-ல் அன்று துவங்கிய அரசு பொது மருத்துவமணை (GENERAL HOSPITAL) கட்டடங்கள், ஸ்டான்லி மருத்துவமணை கட்டடங்கள், சென்னை உயர் நீதி மன்ற வளாகத்தில் உள்ள கட்டடங்கள், எழும்பூர் பாந்தியன் சாலையில் அருங்காட்சியக வளாகத்தில் உள்ள நேர்த்தியான கட்டடங்கள், அதற்கடுத்து கல்வி இயக்குனர்கள் செயல்படும் கட்டடங்கள், வானிலை ஆராய்ச்சி நிறுவன கட்டடங்கள், கீழ்பாக்கத்தில் உள்ள கால்நடை பல்கலைக்கழகத்திற்கு சேர்ந்த கட்டடங்கள், கிண்டியில் பொறியாளர் கல்லூரி வளாகத்தின் கட்டடங்கள் சென்னை இரயில் நிலையகட்டடங்கள், சென்னை எழும்பூர் இரயில் நிலையகட்டடங்கள்,அதன் அழகான கோளவடிவில் அமைந்த கடிகாரக் கூண்டு, கோயமுத்தூரில் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கட்டடங்கள் மேலும் பல்வேறு நீதிமன்ற கட்டங்கள் இப்படி பல அரிய கட்டடங்கள் சென்னையிலும் மற்ற பெரிய நகரங்களிலும் ஆங்கில அரசு காலத்தில் கட்டப்பட்டு இன்று வரை நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

 • தமிழ் நாட்டின் பன்முக வளர்ச்சிக்கு ஈடு கொடுக்குமாறு கட்டடப் பிரிவிலும், கல்வித்துறை, மருத்துவத்துறை, நீதித்துறை, வேளாண்மைத்துறை, கால்நடைத்துறை இப்படி அரசின் பல் வேறு துறைகளின் வளர்ச்சிக்கேற்ப வேண்டிய கட்டடங்களையும் இத்துறை கட்டி முடித்து வருகிறது.

 • நாடு சுதந்திரம் பெற்று ஆக்கப்பணிகள் மிக அளவில் பெருகும் நிலையில், பணிகள் ஒரே சமயம் மிக விரைவில் பல இடங்களில் விரிவாக்கப்பட வேண்டியதாலும், பணிகளின் தொழில்நுட்ப அறிவியலும் விரிவடைவதன்றி வேறுபட்ட பயிற்சியையும் பயன்படுத்தி செயலாக்க வேண்டியதாலும், இத்துறை ஒவ்வொன்றாக கிளை விட ஆரம்பித்தது. 1946-ஆம் ஆண்டு நெடுஞ்சாலைத்துறை, 1961-ல் வீட்டு வசதி வாரியம், அதன்பின் குடிசை மாற்று வாரியம், 1971-ல் தமிழ்நாடு குடிநீர் வாரியம், அதை அடுத்து சென்னைக்குத் தனியே சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் என பல நிறுவனங்கள் பொதுப்பணித்துறையின் பணிகளை ஏற்று தனித்தனியே இயங்க ஆரம்பித்தன. பாசனமும் கட்டடமும் இணைந்து தற்போது செயல்பட்டு வரும் பொதுப்பணித்துறையிலிருந்து, நீர்வளத் துறையும் பிரிந்து செயல்பட உள்ளது.

பொதுப்பணித்துறை சீரமைப்பு – 1968
 • நீர்வள ஆதாரப்பணிகளை நல்ல முறையில் நிறுவவும் மேம்படுத்தவும், பாசனப்பணிகளை ஆற்றுப்படுகை வாரியாக ஒருங்கிணைத்து, ஒவ்வொரு படுகையிலும் கிடைக்கும் நீரைக் கொண்டு மேலும் எந்த அளவிற்கு பயனடைய முடியும் என திட்டமிடவும், செயலில் இருக்கும் நீர் ஆதாரங்களான ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள், கட்டுமானங்கள் இவைகளை நவீன முறையில் பராமரிக்க ஏதுவாகவும், சென்னையிலன்றி, திருச்சி, மதுரை, பொள்ளாச்சி நகரங்களில் தலைமைப் பொறியாளர் அலுவலகங்களை ஏற்படுத்தி துறையின் அமைப்பு 1995 -ஆம் ஆண்டு மாற்றி அமைக்கப்பட்டது.

 • இன்றைய நிலையில் பொதுப்பணித்துறை கட்டடங்கள் மற்றும் நீர்வள ஆதார துறை என இரண்டு பிரிவுகளாக செயல்படுகிறது.

பொதுப்பணித்துறையின் முன்னேற்ற வரலாறு
 • 1809க்கு முன்னால் - கிழக்கிந்திய கம்பெனி நிறுவிய பிறகு முதலில் மாவட்ட ஆட்சியரிடம் பாசன பணிகளுடன் வருவாய் ஈட்டும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

 • 1809 – பொறியியல் அலுவலர்கள் ஏரிகள் சீரமைப்பு கண்காணிப்பாளராக சிறுபாசன பணிகள் மற்றும் முன்னேற்ற பணிகளுக்காக நியமிக்கப்பட்டனர்

 • 1819 - கிழக்கிந்திய கம்பெனி மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவும் “இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆப் சிவில் எஸ்டிமேட்” (Inspector General of Civil Estimate) என்பவரின் கட்டுப்பாட்டில் பொது கட்டட பணிகளையும் சேர்த்து கவனிக்கப்பட்டது.

 • 1825 – மொத்த மராமத்து துறை வருவாய் வாரியத்தின்கீழ் இயங்கியது.

 • 1836 – இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆப் சிவில் எஸ்டிமேட் அலுவலகம் நீக்கப்பட்டது. பொதுப்பணித்துறை செயலர் வருவாய் வாரியத்திற்கு நியமிக்கப்பட்டார்.

 • 1838 – மொத்த மாநிலத்தில் மராமத்து கோட்டங்கள் எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு சிவில் பொறியாளரின்கீழ் அமைக்கப்பட்டனர். மேற்கண்ட பொறியியல் துறையின் கட்டுமான மற்றும் சீரமைப்பு பணிகள் அனைத்தையும் மராமத்து கோட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.

 • 1850 – திறமையான நிர்வாகம் மாநில முழுவதுமுள்ள பொதுப்பணிகள் நிறைவேற்றுவது குறித்து இங்கிலாந்திலுள்ள இயக்குநர்களின் கவனத்தை ஈர்த்தது. எனவே அவர்களின் ஆணையின் பேரில் முதல் பொதுப்பணி சீரமைப்பு குழு அமைக்கப்பட்டது.

 • 1858 – மெட்ராஸ் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் தலைமையில் அமைக்கப்பட்டது.

 • 1860 – தலைமைப் பொறியாளர் அவர்கள் பொதுப்பணித்துறையின் அரசு செயலாளராக நியமிக்கப்பட்டார்.

 • 1867 – பாசனத்திற்கென தனி தலைமைப் பொறியாளர் நியமிக்கப்பட்டார்.

 • 1870 – நாடுமுழுவதுமுள்ள சிறுபாசன பணிகளை பராமரிப்பிற்கு பொதுப் பணிக்குழு நியமிக்கப்பட்டது.

 • 1878 – துறை தலைமையின் எல்லா நிர்வாக அதிகாரங்களும் பொதுப்பணித் துறை அரசு செயலர் மற்றும் தலைமைப் பொறியாளர் (பொது) அவர்களுக்கு வழங்கப்பட்டது.

 • 1881 – மாநில முழுவதும் 6 கண்காணிப்புப் பொறியாளர்கள் வட்ட அலுவலகங்களும், அதன் கட்டுப்பாட்டில் 30 செயற் பொறியாளர்கள் கோட்ட அலுவலகங்களும் அமைக்கப்பட்டன.

 • 1885 – பொதுப்பணித்துறை கீழ்காணும் கிளைகளை கொண்டதாக இருந்ததது.

   1.பொதுப்பணித்துறை கட்டட பிரிவு
   2.பொதுப்பணித்துறை பொது பிரிவு
   3.பொதுப்பணித்துறை பாசன பிரிவு

 • 1945 – தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறையின் மிகப் பெரிய விரிவுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும், நாக்பூரில் திட்டம் உருவாக்கப்பட்டது.

 • 1946 – மாநிலத்திலுள்ள சாலை பணிகளை கவனிக்க தனித்துறை உருவாக்கப்பட்டது.

 • 1961 - மெட்ராஜ் சட்டம் 17, 1961 மாநில வீட்டு வசதி வாரியம் மூலம் குடியிருப்புகள் கட்டுவதற்கும், முன்னேற்ற பணிகளுக்காகவும் நிறுவப்பட்டது.

 • 1962 – பொது சுகாதாரம் - மூனிசிபல் பணிகள் துறை ஏற்படுத்தப்பட்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் என்று 14.04.1971ல் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

 • 1969 – ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கண்காணிப்புப் பொறிhளர் மற்றும் அவர்களின்கீழ் மூன்று அல்லது நான்கு செயற் பொறியாளர் மற்றும் அலுவலர்கள் வழங்கப்பட்டு பாசன மற்றும் கட்டட அமைப்புகளின் பணிகள் அந்தந்த மாவட்ட எல்லைக்குள் செயல்படுத்தப்பட்டது.

 • 1967 மற்றும் 1972 – ஐக்கிய நாடுகள் முன்னேற்ற திட்டத்தின்கீழ் மாநிலத்திலுள்ள நிலத்தடி நீரின் ஆற்றல் ஆய்வு செய்யப்பட்டு தனியாக ஒரு தலைமைப் பொறியாளர் நியமிக்கப்பட்டார்

 • 1972க்குப் பிறது – நீர் ஆய்வு நிறுவனம் அமைக்கப்பட்டு தற்போது தலைமைப் பொறியாளர் தரத்தில் ஒரு இயக்குநரின்கீழ் இயங்கி வருகிறது.

 • 1975 – எல்லா மாவட்டங்களிலும் பாசன முன்னேற்ற திட்டம் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டி மூன்றாவது தலைமைப் பொறியாளர் (ஆய்வு மற்றும் திட்டங்களுக்கு) நியமிக்கப்பட்டார்.

 • 1995 – அரசு இத்துறையை நீர்வள ஆதார அமைப்பு மற்றும் கட்டட அமைப்பாக பிரிக்க ஆணை வழங்கியது.

கட்டட அமைப்பு
 • பொதுப்பணித்துறை அரசுப் பணிகளை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட துறையாகும்.

 • ஆரம்பகால கட்டடங்களில் இத்துறை பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தது, உதாரணமாக பின்வருமாறு பணிகளை செயல்படுத்தி வந்தது.

History
 • ஒவ்வொரு காலக்கட்டங்களிலும் பணிகளின் எண்ணிக்கையும், செயல்படுத்த வேண்டிய நுட்பமான பணிகளையும் கருத்தில் கொண்டு ஒவ்வொரு துறையாக பிரிந்து செயல்பட துவங்கியது.

History

 • கட்டடப் பணிகள், பொதுப்பணித்துறையின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

POETRY ABOUT PWD-IN TAMIL